கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் திருமலையில்......

 கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் திருமலையில்......

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பபதற்கான வேலைத்திட்டம் தொடர்பான கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிஐஜி, எஸ்எஸ்பி, மற்றும் சிறப்பு அதிரடிப்படை பொறுப்பாளர்களுடன் பிரதம செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.

2023 மே 17 முதல் போதைப்பொருள் ஒழிப்பபதற்கான வேலைத்திட்டம் பற்றிய மாதாந்த முன்னேற்றத்தை கௌரவ ஆளுநர் அவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்ததுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளார். இதுவரை அம்பாறையில் 1,311 போதைப்பொருள் வியாபாரிகளும், மட்டக்களப்பில் 1,045 பேரும், திருகோணமலையில் 1,260 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முயற்சிகள் கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை வெற்றிகரமாக 95% குறைத்துள்ளதுடன் 100% ஒழிப்பை அடைந்து, இலங்கையில் போதைப்பொருள் அற்ற முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

 ஆளுநரின் உத்தரவின்படி, பொலிஸின் ஆதரவுடன் பாடசாலைகளை கல்வித் திணைக்களம் உன்னிப்பாகக் கண்காணித்து வரப்படுகின்றது. இதன் விளைவாக தற்போது பாடசாலைகளில் 0% போதைப்பொருள் பயன்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 0% போதைப்பொருள் பாவனை இலக்கை அடைவதற்கு முழு ஆதரவை வழங்கிய பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கு விசேட நன்றிகளை ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.




Comments