வவுணதீவில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை.............
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காலை கிராமத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிராமத்துக்குள் அயல் கிராமங்களிலிருந்து சட்டவிரோத கசிப்பு வருவதனை தடுத்தல் மற்றும் விற்பனையை தடுத்தல் தொடர்பிலும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
வவுணதீவு பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவுக்கான பொறுப்பதிகாரி கே.வரதராஜன், கிராம உத்தியோகத்தர் கே.சிவநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் எஸ்.சதீஸ்குமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
Comments
Post a Comment