மட்டக்களப்பில் ரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தால் செயலமர்வு................
தகவல் அறியும் உரிமைக்கான மாவட்ட மையமான லிப்ட் நிறுவனம் ரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள செயல் திட்டத்தின் செயலமர்வு மாவட்ட சனசமூக நிலைய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
பொது சுகாதாரத்துறை கொள்முதல்களில் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொது சுகாதார சேவைகளுக்காக கண்காணித்தல், பின் தொடர்தல், அறிக்கை செய்தல் மற்றும் வாதிடுதலுக்காக எந்தவித பாகுபாடும் இல்லாமல் பிரஜைகளின் ஈடுபாட்டை மேம்படுத்தல் தொடர்பாக சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் மாவட்ட சனசமூக நிலைய சம்மேளன உறுப்பினர்களுக்கான ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு கல்லடியில் இடம் பெற்றது.
மாவட்ட சனசமூக நிலைய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில் ரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் அப்துல் சருக் வளவாளராக கலந்து கொண்டார்.
செயலமர்வில் மாவட்ட சனசமூக நிலைய சம்மேளன தலைவர் கமல், தகவல் அறியும் உரிமைக்கான மாவட்ட மையமான லிப்ட் நிறுவனத்தின் இணைப்பாளர் சுதன் மற்றும் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், மாவட்ட சனசமூக நிலைய சம்மேளன உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்தனர்.
Comments
Post a Comment