காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி.............

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி.............

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (19) இடம் பெற்றது.

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தை வளர்த்திடவும், உள்ளுணர்வை அதிகரிக்கவும் ஆற்றுப்படுத்தும் நோக்கில் பயிற்சி இடம்பெற்றது.

வாழும் கலை அமைப்பின் சிரேஷ்ட ஆசிரியர் டாக்டர் சாத்வி டயாமயி கலந்து யோகா பயிற்சி செயலமர்வை நடாத்தினார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதரின் வழிகாட்டலிலும் இடம்பெற்ற நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  சில்மியா, உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Comments