மட்டக்களப்பு மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ....................

 மட்டக்களப்பு மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ....................

மட்டக்களப்பு மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் (27) இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமிய வீதிகள் அபிவிருத்திகள் தொடர்பாகவும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள், கால்நடை வளர்ப்பு, மீள்குடியேற்றம் மற்றும் மாவட்டத்தில் விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசிர், கணக்காளர் எம்.வினோத், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்தகாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments