தாளங்குடா கடற்கரை வீதி, புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு..............
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment