ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம்: கிழக்கு ஆளுனர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் முன்னேட்பாட்டு கலந்துரையாடல்..............
ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம்: கிழக்கு ஆளுனர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் முன்னேட்பாட்டு கலந்துரையாடல்..............
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையிலான முன்னாயத்த நடவடிக்கைகள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றன.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் மட்டக்களப்பு விஜயம் தொடல்பில் முன்னாயத்த நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் கூட்டம் மாவட்ட செயலகத்தில் (19) திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தினை தலைமைதாங்கி நடாத்திய கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவினரிடம் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான முன்னாயத்த நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் மேலதிக ஆலோசனைகளையும் வழங்கி வைத்தார்.
இதன் போது புதிதாக திராய்மடுவில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கட்டிடத்திறப்பு விழா, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மக்களின் உறுமய காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குதல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் ஏனைய நிகழ்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், மாவட்டத்தின் முக்கிய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment