நித்தி கனகரத்தின் “பாரம்பரிய தமிழர் உணவுகளின் போசணைக்கூறுகள் ஓர் அறிவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா.......

 நித்தி கனகரத்தின் “பாரம்பரிய தமிழர் உணவுகளின் போசணைக்கூறுகள் ஓர் அறிவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா.......

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையில் மருத்துவர் நித்தி கனகரத்தினம் அவர்களின் “பாரம்பரிய தமிழர் உணவுகளின் போசணைக்கூறுகள் ஓர் அறிவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா, மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் (16) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கான பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி பேராசிரியை புனிதா பிரேமானந்தராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இறைவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் பிரணுஜா கிருஷ்ணப்பிரபா அவர்களால் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவஶ்ரீ வி.கே.சிவபாலன் குருக்கள் அவர்களால் நிகழ்வுக்கான ஆசியுரை வழங்கப்பட்டது.

அதன் பிற்பாடு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய நடன நெறியாள்கையாளர் சர்மிலதா பிரபாகரன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அடுத்த நிகழ்வாக தலைமையுரையானது, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அடுத்து நூலாசிரியர் அறிமுகத்தை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதில் உபவேந்தரும் விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி க.பிரேமகுமார் அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து நூலுக்கான நயவுரையானது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட பேராசிரியர் த.சுந்தரேசன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீட பீடாதிபதி பேராசிரியை புனிதா பிரேமானந்தராஜா அவர்களால் கௌரவ அதிதி உரை நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிழக்குப்பல்கலைக்கழக நூலகர் கலாநிதி வி.ஜெ.ஜெயராஜ் அவர்களால் நூல் வாசக விம்பம் நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலின் முதற்பிரதியை கிழக்குப்பல்கலைக்கழக முன்னைநாள் உபவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனை அடுத்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களால் பிரதம அதிதி உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்புரையானது நூலாசிரியர், மருத்துவர் நித்தி கனகரத்தினம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிழக்குப்பல்கலைக்கழக ஊழியர்களால் எழுத்தாளரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் பிற்பாடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் ச.கணேசமூர்த்தி அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.






Comments