மட்டக்களப்பு சின்ன ஊறணிமெதடிஸ்த திருச்சபையால் சிறுவர்களுக்கான மருத்துவ முகாம்................

 மட்டக்களப்பு சின்ன ஊறணிமெதடிஸ்த திருச்சபையால் சிறுவர்களுக்கான மருத்துவ முகாம்................

மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் பாபரா அற்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று (14) ஆரம்பமானது. சிறுவர் அபிவிருத்தி திட்ட இயக்குனர் அருள் கலாநிதி அருள்ராஜா தலைமையில் சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் குரு அருட்பணி க.ஜெகதாஸ் அடிகளாரின் வழிகாட்டலில், திருச்சபை வளாகத்தில் இன்றும், நாளையும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

மருத்துவ முகாமில், குழந்தை நல வைத்திய நிபுணரும், முன்னாள் கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீடாதிபதியுமான வைத்தியர் அஞ்சலா அருள் பிரகாசம் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

பார்பரா அற்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தில் சிறுவர்களின் உடல் நல ஆரேக்கியம் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகார்த்தல் மற்றும் வாழ்வியலுக்கான மருத்துவ சுகாதார ஆலோசனை வழங்கல் என்பன பற்றி அடிப்படையாக கொண்டு இம் மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறுவர் அபிவிருத்தி திட்ட முகாமையாளர் எம்.கேசுறாஜ் உட்பட, ஆலய ஊழியர்கள், பெற்றோர்கள் இணைந்த பங்களிப்புடன் சிறுவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments