கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவு.....................

 கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிறைவு.....................

மட்டக்களப்பு மறைமாவட்ட கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (23) கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

கல்லடி - டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது கடந்த 20 ஆம் திகதி பங்குத்தந்தை இயேசு சபைத்துறவி அருட்பணி லோரன்ஸ் லோகநாதன்  அடிகளார் தலைமையில்  ஆரம்பமானதைத் தொடர்ந்து செபமாலையும், அதனைத் தொடர்ந்து முதலாவது நவநாள் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நவநாட் காலங்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் இடம்பெற்றதுடன், சனிக்கிழமை (22) மாலை 5.30 மணிக்குப் புனிதரின் திருச்சொருபப் பவனியும், நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்றது.

பெருவிழா கூட்டுத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை (23)  காலை 7.00 மணிக்கு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் அடிகளார் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்திருந்தனர்.

குறித்த பெருவிழா கூட்டு திருப்பலியில் மூத்த இயேசு சபைத்துறவி ஜோன் யோசப்மேரி அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொது நிலையினர், பங்குமக்கள், அயல் பங்கு மக்கள், ஆலய நிருவாகிகள், 243 ஆவது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமாரசிங்க என அதிகளவிலானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டு புனிதரின் ஆசீரை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments