மட்டக்களப்பில் சிறிய நீர்பாசன குளங்களின் நீர் முகாமைத்துவக் கை நூலொன்று வெளியிடப்பட்டது..........

மட்டக்களப்பில்  சிறிய நீர்பாசன குளங்களின் நீர் முகாமைத்துவக் கை நூலொன்று  வெளியிடப்பட்டது..........

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தில் இயங்கி வரும் வாழ்வகம் விஷேட தேவையுடையோருக்கான அமைப்பினால் சிறிய நீர்பாசன குளங்களின் நீர் முகாமைத்துவக் கை நூல் வெளியீட்டு நிகழ்வு  மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

விஷேட தேவையுடையோருக்கான அமைப்பினால் நெடுஞ்சேனை கிராமத்தில் பச்சைக்கடைக்காரன் குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு அதனூடாக குளத்தை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 மாற்றுத் திறனாளிகள் குடும்பங்கள் உள்வாங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயம், மீன் பிடி, கால்நடை வளர்ப்பு போன்ற திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் சீ.பி.எம் நிறுவனத்தின் நிதியுதவியில், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ அமைப்பினூடாக மண்முனை மேற்கு வாழ்வகம் விஷேட தேவையுடையோருக்கான அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நூல் வெளியிட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், உதவி பிரதேச செயலாளர் யோகராஜா பொறியியலாளர் திவாஸ்கர், கணக்காளர் சுந்தரலிங்கம், வாழ்வகம் அமைப்பின் தலைவர் பாலகப்போடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Comments