மெதடிஸ்டிதமத்திய கல்லூரி சாரணமாணவர்களின் தீபாசறை நிகழ்வு.............

மெதடிஸ்டிதமத்திய கல்லூரி சாரணமாணவர்களின் தீபாசறை நிகழ்வு.............

மட்டக்களப்பு மெதடிஸ்டித மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் தீ பாசறை நிகழ்வு (16) கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மாணவர்களை எதிர்கால நற்பிரஜைகளாகவும் எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுப்பவர்களாகவும் மாற்றும் வகையில் சாரணிய மாணவர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் கீழ் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மெதடிஸ்டித மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் பாசறை நிகழ்வு இடம்பெற்றது.

 குறளைச்சாரண தலைவர் என்.பிரதீபன், குழுச்சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மன், சாரண தலைவர்களான என்.கௌஷன், எஸ்.சுகுவரன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த தீபாசறை நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு
பாடசாலை சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன. நிகழ்வில் பெற்றோரும் கலந்து கொண்டு நிகழ்வினை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.


Comments