களுவாஞ்சிகுடியில் உலகத் தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு................
(வரதன்) உலகத் தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இரத்ததான முகாம் (28) நடைபெற்றது.
உலகத் தன்மம் அமைப்பின் பல்வேறு சமூகப் பணிகளில் மற்றுமொரு அங்கமாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் யோ.இதயகீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் சுகாதாரம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்குப் பொறுப்பான இணைப்பாளர் வல்லிபுரம் குணசேகரம், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபய விக்கிரம மற்றும் இரத்த நன்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது ஆர்வத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இரத்ததானம் வழங்கினர்.
Comments
Post a Comment