விழிப்புலனை இழந்தாலும், தன்னம்பிக்கையால், கல்வியில் சாதித்த பாலகிருஸ்ணன் பிரசோபன்...........

 விழிப்புலனை இழந்தாலும்,  தன்னம்பிக்கையால், கல்வியில் சாதித்த பாலகிருஸ்ணன் பிரசோபன்...........

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற விழிப்புலனற்ற மாணவன் பாலகிருஷ்ணன் பிரசோபன் வெளியான 2023ம் ஆண்டிற்கான உயர் தர பரீட்சையில் கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தரிசனம் விழிப்புலனற்ற பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயிற்சிகளை பெற்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் இணைந்து,  தனது கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தார். உயர்தரப் பரீட்சையில் 2A, B சித்திகளைப் பெற்ற மாணவனை, மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினர்  கௌரவித்திருந்தனர்.

கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் ஒய்வுநிலை முறைசாரா கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் தயானந்தன் உட்பட வலயக் கல்வி அலுவலக கல்விப் பணிப்பாளர்கள், அலுவலக சமூகத்தினர் தமது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

Comments