தாழங்குடாவில் புணரமைத்த வீதிகள் மக்கள் பாவனைக்கு பாவனைக்காக திறந்துவைப்பு.............

 தாழங்குடாவில் புணரமைத்த வீதிகள் மக்கள் பாவனைக்கு பாவனைக்காக திறந்துவைப்பு.............

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் உள்ள வேடர் குடியிருப்பு கிராமத்தில் மணல் வீதியாக காணப்பட்ட வீதிகளை கிரவல் வீதிகளாக புணரமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

'மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்' எனும் சிந்தனையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அமுலாக்கத்திலும் மண்முணை பற்று பிரதேச செயலகத்தின் கண்காணிப்பிலும் 2.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட இவ்வீதியானது  மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

வீதியின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன், பிரதேச செயலாளர் தட்சனா கௌரி திணேஷ், பிரதேச சபை செயலாளர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments