ஏறாவூர் நகர் பிரதேச செயல சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் புலமைபரிசில் கருத்தரங்கு.......
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் 5ம் ஆண்டு புலமை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோட்டத்திற்கான இலவச கருத்தரங்கு ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கானது (22)ம் திகதி நடைபெற்றது. இதன் வளவாளர்களாக ஏறாவூர் பஸீர் சேகுதாவூத் வித்தியாலய ஆசிரியர் எஸ்.நஸீர் அஹமட் அவர்களும் ஏறாவூர் அல்-ஜூப்றியா வித்தியாலய ஆசிரியர் ஏ.எல்.அன்சார் அஹமட் ஆகியோர் விரிவுரைகளை வழங்கி இருந்தனர்.
இவ் 5ம் ஆண்டு மாணவர்களுக்கான முன்னோடி இலவச கருத்தரங்கை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவு வருடந்தோறும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment