மட்டக்களப்பில் றொட்றிக் கழகம் ஹெறிடேஜினால் கண் அறுவைச் சிகிச்சை முகாம் முன்னெடுக்கப்பட்டது.................

 மட்டக்களப்பில் றொட்றிக் கழகம் ஹெறிடேஜினால் கண் அறுவைச் சிகிச்சை முகாம் முன்னெடுக்கப்பட்டது.................

மட்டக்களப்பு றொட்றிக் கழகம் ஹெறிடேஜ் மற்றும் றொட்றிக் கொழும்பு போட் சிட்டி ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பூரண பங்களிப்போடு கண் அறுவைச் சிகிச்சை இன்று வெள்ளிக்கிழமை (21) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு றொட்றிக் கழகத் தலைவர் கே.கௌரீஸ்வரன் தலைமையில் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை 50 பேருக்கு இலவசமாக கண் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கண் அறுவை சிகிச்சையானது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகளீர் இல்லம் மற்றும் மட்டக்களப்பு சமூக நலன்புரி அமைப்பின் நிதி பங்களிப்பின் ஊடாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




Comments