மட்டக்களப்பு வின்செட் தேசிய பாடசாலைமாணவிகள் சாதனை............
2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாவட்ட நிலையில் முதல் 10 இடங்களிற்குள்ளும் வின்சென்ட் மாணவிகள் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்தோடு, பொறியியல் துறைக்கு 6 மாணவிகளும், மருத்துவத்துறைக்கு 11 மாணவிகளும், முகாமைத்துவத் துறைக்கு 9 மாணவிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சாதனை படைத்த மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Comments
Post a Comment