ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் பொன்விழாவின் விசேட நிகழ்வு....
ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் 50வது ஆண்டை முன்னிட்டு பொன்விழா நிகழ்வுகள் பழைய மாணவர்களினால் நடாத்தப்பட்டது. இதில் முக்கிய விடயமாக பழைய, புதிய மாணவர்களின் நடைபவணியும், மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் பாடசாலையின் அதிபர் SMM.நவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு வெற்றி பெற்றோருக்கான பரிசில்களையும், நினைவு சின்னங்களையும் வழங்கி வைத்தார்.
Comments
Post a Comment