ஜனாதிபதியின் வெள்ளி விருதினை பெற்றுக் கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம்.........
2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் போட்டி அரச நிறுவனங்களுக்கிடையில் நடைபெற்றது. இப்பிரிவில் பங்குபற்றிய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஜனாதிபதி சுற்றாடல் விருத்திற்கான வெள்ளி விருதினை பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் (28)ம் திகதி நடைபெற்ற போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நாடாளவிய ரீதியில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள், பொது அமைப்புக்கள் என 902 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் அவற்றுக்குள் தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றுக் கொண்டது பாராட்டத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment