மண்முனை மேற்கு பிரதேசசெயலகத்தில், சுற்றாடல் தினநிகழ்வுகள்..........
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில், சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
பிரதேச செயலக வளாகத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு, பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி அதிதியாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் இணைந்து வீதியோரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்ததோடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வும் இடம் பெற்றது. கரவெட்டி, புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கிகளில் கொய்யா, மா, தோடை, பலா, கறுவா போன்ற பயன் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
Comments
Post a Comment