ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் பயறு அறுவடை நிகழ்வு..............
மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகப் பிரிவில் கமத்தொழில் அமைச்சினால் மானியமாக வழங்கப்பட்ட பயறு அறுவடை நிகழ்வு (19) திகதி இடம்பெற்றது.
மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் தெட்சணகெளரி தினேஷின் தலைமையில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலுடன் கிரான்குளம் கிராம உத்தியோகத்தர் பகுதியில் இவ்வறுவடை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர், கமநல சேவை அபிவிருத்தி, கிராம சேவைகள், பொருளாதார அபிவிருத்தி, பிரதேச செயலக அபிவிருத்தி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மேட்டுநில கமநல அமைப்பு, விவசாயிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment