காத்தான்குடியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு........

 காத்தான்குடியில் (19) இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு........

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி ஏ.எல்.எஸ் மாதத்தை வீதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதிய காத்தான்குடி அக்பர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் 43 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தையான நாகூர் பிச்சை அலியார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியால் வேகமாக சென்று கொண்டிருந்த போது வீதியின் அருகிலிருந்த சுற்று மதில் சுவரொன்றில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

Comments