ஜகத் பிரியங்கர, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஸ்ரீ.ல.சு.க. புதிய கூட்டணி மேடையில்.......................
ஜகத் பிரியங்கர, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஸ்ரீ.ல.சு.க. புதிய கூட்டணி மேடையில்.......................
'நாட்டிற்கு வெற்றி ஒன்றிணைந்து பயணிப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான வெல்லவாய மக்கள் பேரணியானது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் புதிய கூட்டணி கட்சியில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – புதிய கூட்டணி பொதுக்கூட்டம் தொடரில் வெல்லவாய பொதுக்கூட்டத்தில் சாதனை படைக்கும் வகையிலான மக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் புதிய கூட்டணியானது, பொருளாதாரத்தையும், நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்லும் சக்தியாக இருப்பதால், முற்போக்கு ரீதியான மக்களும், அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் நாளுக்கு நாள் இக்கூட்டணியை நோக்கி திரண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய கூட்டணியாக உருவாகும் எனவும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் இந்நிகழ்வில் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, அநுர பிரியதர்ஷன யாபா, நிமல் லான்சா, எஸ்.வியாழேந்திரன், ஜகத் பிரியங்கர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment