மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்.....................
மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்.....................
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (12) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய மஹோற்சவம் திருவிழா பிரதம ஆகம கிரியா பாவனர் சிவாச்சாரியார் திலகம் வேதத்தமிழ் மறைச்சுடர் சிவஸ்ரீ நாராயண சண்முகநாத குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றதுடன் பிள்ளையாரடி புரவிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அடியார்கள் புடை சூழ வேத, நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக அம்பாளுக்கு தீபாராதனை பூஜை வசந்த மண்டபதில் இடம்பெற்றது.
தொடர்ந்து கொடித்தம்பத்துக்கு அருகில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் அடியார்களின் அரோகரா கோசத்துடன் நேற்று நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment