மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ........
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (30) இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட சர்வமத செயற்குழுவின் சமாதான செயற்பாட்டாளர்கள் மற்றும் மதப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் கால செயற்பாடுகள் சம்பந்தமாகவும், வாக்காளர் தொடர்பாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி பி.சத்தியபவான் இதன் போது கருத்து தெரிவித்தார்.
Comments
Post a Comment