கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய சரஸ்வதி ஆலய கும்பாபிஷேகம்.................
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி அம்பிகையின் ஆலய ஏககுண்டபக்ஷ மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.50 தொடக்கம் 10.20 வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நிகழ்த்தப்பட்டது.
இக்கும்பாபிஷேக நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை (08) காலை 7.30 தொடக்கம் மாலை 5.30 மணி வரை எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லடி உப்போடை, கல்லடி மற்றும் அதனை அண்டி வாழும் அடியார்கள் கலந்து கொண்டதைக் காண முடிந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலான 12 தினங்கள் மண்டலாபிஷேகப் பூசைகள் நடைபெற்று, இறுதி நாளான 22 ஆம் திகதியன்று சங்காபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment