'தமிழர் பாரம்பரிய சமையலின்அடிப்படையும், உடல்ஆரோக்கியமும்'........
'தமிழர் பாரம்பரிய சமையலின் அடிப்படையும், உடல் ஆரோக்கியமும்' எனும் தலைப்பில் விசேட கலந்துரையாடலொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஜினி ஸ்ரீகாந்த் தலைமையில் (06) நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக் கழக ஆரம்ப காலவிவசாய பீடப் பீடாதிபதியும், அவுஸ்திரேலிய விக்ரோறிய பல்கலைக்கழக விரிவுரையாளரும், அங்கீகாரம் பெற்ற மருத்துவ பயிற்சியாளரும், உணவு, ஊட்டச்சத்து வல்லுநருமான நித்தி கனகரெத்தினம் கருத்துரைகளை முன்வைத்தார்.
கிழக்கு பல்கலைக்கழக ஒய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆறுமுகம் நிர்மோகன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment