மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு......

 மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு......

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலகம் இன்று (19) இரத்ததான நிகழ்வை நடாத்தியது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதி தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில், மண்முனை மேற்கு பிரதேச செயலகமும், போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரும் இணைந்து, இரத்ததானம் வழங்கி உயிரைக் காப்போம் எனும் தொனிப்பொருளில், இரத்ததான முகாமை முன்னெடுத்து வருகிறது.

பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் இரத்ததான நிகழ்வானது நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் கே.மதனழகன், தாதிய உத்தியோகத்தர்கள், மண்முனைமேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் என பலரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

Comments