மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிதாக நியமனம் கிடைத்த கிராம உத்தியோகஸ்தர்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு ..............
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிதாக நியமனம் கிடைத்த கிராம உத்தியோகஸ்தர்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு ..............
மட்டக்களப்பு மாவட்டத்திற்கென அரசாங்கத்தினால் பொதுச் சேவை தேசத்தின் முன்னேற்றத்திற்கானது எனும் கருப்பொருளின் புதிதாக நியமனம் கிடைத்த 87 கிராம உத்தியோகஸ்தர்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதசினி ஸ்ரீகாந்த் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் கலந்து கொண்டு கிராம சேவையாளர்களின் பணிகளின் முக்கியத்துவம் பற்றி இங்கு விளக்கம் அளித்தார்.
புதிதாக நியமனம் பெற்ற அவர்களின் அறிமுக நிகழ்வுடன் ஆரம்பமான இந்த பயிற்சி செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான படுவான்கரைப் பகுதியில் இருந்து அதிக அளவிலான புதிய கிராம சேவை யாளர்கள் கலந்து கொண்டமை இங்கு விசேட அம்சமாகும்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தகுதியானவர்களை இப் பதவியில் அமர்த்த வேண்டும் எனும் நோக்குடனும் அவர்களுக்கான புதிய நியமனங்கள் வழங்குவதில் சற்று காலதாமதம் ஆயிருந்தது, மாவட்ட ஐக்கிய கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் வளவாளர்கள் புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவர்கள் புதிதாக நியமனம் பெற்ற பிரதேச செயலகப் பிரிவில் இவர்களுக்கு உரிய கடமைகள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய சீருடைகள் அரசாங்கத்தின் திட்டங்களில் பயனாளிகளை தெரிவு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் காணிப் பிணக்குகள் போதைப் பொருள் தடுப்பு சுகாதார சேவைகள் கல்வி பயன்பாடுகள் என்ன பலதரப்பட்ட விடயங்களில் மூன்று மாத பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Comments
Post a Comment