கிழக்கிலுள்ள விமான நிலையங்களை புனரமைத்து செயற்படுத்த வேண்டும் : சிவநேசதுரை சந்திரகாந்தன்...........
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரும், அரசாங்கமும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலையத்திற்கும், கிழக்குக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும் வகையில், கிழக்கிலுள்ள விமான நிலையங்கள் புனரமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுலாத்துறை, காணி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சுற்றுலாத் துறையை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் முக்கிய தளமாகத் திகழ்கிறது.
கிழக்கில் பல சுற்றுலா வலயங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இருந்தாலும் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில் பெரும் அசௌகரியங்கள் காணப்படுகின்றன.
சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை மணித்தியாலங்களில் கிழக்கிக்கு அவர்கள் வரக் கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலைமையை உருவாக்க அங்குள்ள விமான நிலையங்கள் புனரமைக்கப்பட வேண்டும். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
Comments
Post a Comment