மட்டக்களப்பு சாலையின் உகந்தை, கதிர்காமத்திற்கான விஷேட பஸ் சேவைகள் .........................

  மட்டக்களப்பு சாலையின் உகந்தை, கதிர்காமத்திற்கான விஷேட பஸ் சேவைகள் .........................

இலங்கை போக்குவரத்து சபையின், மட்டக்களப்பு சாலை கதிர்காமத்திற்கான காட்டு வழிப்பதையூடாக உகந்தையில் இருந்து பயணிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து தமது சேவையை வழங்கவுள்ளது.

இதற்கான விஷேட பஸ் சேவைகள் 2024.06.30ம் திகதி முதல்நடைபெறவுள்ளது. ஒரு வழிப்பாதைக் கட்டணம் மட்டக்களப்பு இருந்து உகந்தைக்கு பிரதான கட்டணம்: 800.00 ரூபாவும் அறவிடப்படுவதுடன் ஆசனப்பதிவுக் கட்டணமாக: 35.00 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாகவும், மட்டக்களப்பு இருந்து கதிர்காமத்திற்கான பிரதான கட்டணமாக: 1050.00 ரூபாவும் ஆசனப்பதிவுக் கட்டணம்: 35.00 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அடி யார்களின் நலன் கருதி தங்கள் இருக்கைகளை முழுமையாக 2024.06.20ம் திகதியிலிருந்து ஆசனப்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

Comments