மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், வலய மட்ட தமிழ் மொழித்தின நிகழ்வு................
(கடோ கபு) தமிழை உலகறியச் செய்த அறிஞர்களுள் ஈழத்தில் அவதரித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சு அகில இலங்கை தமிழ் மொழித் தின நிகழ்வை வருடந்தோறும் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித்தின நிகழ்வின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியினது இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் Y.ஜெயச்சந்திரன் அவர்களின் தலைமையில் மட்/மமே/கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தின இறுதி நாள் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்களும், வயலத்திற்குள் செயற்படும் 3 கல்விக் கோட்டங்களது கல்விப் பணிப்பாளர்களும் ஆசிரிய ஆலோசகர்களுடன் வலயத்திற்குள் இயங்கும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினமிருந்து வலயத்திற்குள் செயற்படும் 3 கோட்டமட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கிடையிலான வலய மட்டப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்த, நிலையில் இன்றைய இறுதி நாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தமிழ் மொழித்தினப்போட்டிகளில் கோட்டப் பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்ட நிலைகளின் புள்ளிகளின் அடிப்படையில் மண்முனை தென் மேற்கு கோட்டம் முதலாவது இடத்தினையும், மண்முனை மேற்கு கோட்டம் இரண்டாவது இடத்தினையும், ஏறாவூர் பற்றுக் கோட்டம் மூன்றாவது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
Comments
Post a Comment