பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையை சேர்ந்த சாதனை வீரன் ஹஷன் ஸலாமா.................
திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
(15) அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது இஸ்லாமிய நபராகவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
தரம் 10இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர், கடந்த மூன்று மாதங்களாக இச்சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக் கடந்துள்ளார். இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்ரல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகிறார்.
மேலும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரிகரன் தன்வந்தையும் இவரே பயிற்றுவித்திருந்தார்.
இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் தனது பெயரை பதிந்துகொள்வதற்காக தனது இலக்கினை அடையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியாளராக தெரிவாகியிருக்கிறார்.
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத்துறைக்கு அப்பால் சென்று, தனது அர்ப்பணிப்புணர்வோடு நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
Comments
Post a Comment