மண்முனை வடக்கு பிரதேச செயலாளகத்தில் காணி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு.............
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணி பிரச்சினைகள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் டேபா மண்டபத்தில் (14) திகதி இடம் பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் நடைமுறையில் உள்ள காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் காணி சுற்று நிருபங்கள் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு ஓய்வு பெற்ற உதவி காணி ஆணையாளர் கே. குருநாதன் தெளிவூட்டளை வழங்கினார்.
பொது மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கும் காணிகளை சிறந்த முறையில் கையாள்வதற்கான விளக்கங்களை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது உத்தியோகத்தர்களின் ஐயங்களுக்கான பதில்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்சினி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், குடியேற்ற காணி உத்தியோகத்தர்கள், காணி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment