மட்டக்களப்பு நகரில் ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்த ஆணையாளர்..............

 மட்டக்களப்பு நகரில் ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்த ஆணையாளர்..............

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மாநகர சபையின் ஆணையாளர் மீண்டும் ஒளிரச் செய்துள்ளார்.
பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு வேளையில் ஒளிர வேண்டிய வீதி மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் அனேகமான நகர்புற பகுதிகள் இருட்டடைந்து காணப்படுவதாகவும், அவற்றினை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய உடன் நடவடிக்கை எடுத்த ஆணையாளர் வீதி மின் விளக்குகள் ஒளிராதிருந்த தாண்டவன்வெளி, மட்டக்களப்பு நகர் பகுதி மற்றும் கல்லடி பாலத்தை அண்டிய பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை உடன் ஒளிர செய்யுமாறு மாநகர சபையின் மின்சார வேலை பிரிவினருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய உடன் செயற்பட்டு வீதி விளக்குகளை பழுது பார்த்து ஒளிராத விளக்குகளை ஒளிரச் செய்ததுடன், புதிய வீதி விளக்குகளையும் பொருத்தியுள்ளார்.
நீண்ட காலமாக இருண்டு கிடந்த பகுதிகளுக்கு ஒளியூட்டியமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநக சபைக்கும் அதன் ஆணையாளருக்கும் பலரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments