மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில், சிறந்தபெறுபேறுகளைப் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு...........

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில், சிறந்தபெறுபேறுகளைப் பெற்றமாணவர்களுக்கு கௌரவிப்பு...........

வெளியாகியுள்ள 2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (05) இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை, அதிபர் தலைமையிலான குழு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று பாராட்டியிருந்த நிலையில், பாடசாலையிலும் கௌரவிப்பு நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. பாடசாலை அதிபர் K.பகீரதன் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், கல்லூரி பழைய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Comments