வவுணதீவு சந்தை கட்டடத்திற்கான அடிக்கல்லினை இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் நாட்டினார்..............
வவுணதீவு சந்தை கட்டடத்திற்கான அடிக்கல்லினை இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் நாட்டினார்..............
வவுணதீவு பிரதேச சபையின் செயலாளர் என்.கிருஷ்ணபிள்ளை தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்திருந்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் சுமார் 20.54 மில்லியன் செலவில் குறித்த சந்தைக் கட்டடத் தொகுதியானது நிர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து மணல் வீதிகள் அற்ற கிராமம் திட்டத்தின் கீழ் உன்னிச்சை நெடியமடு பகுதியில் காணப்பட்ட உள்ளக மணல் வீதியை கிறவல் வீதியாக மாற்றியமைத்து இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
Comments
Post a Comment