மண்முனை பற்றுபிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதார பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.......
மண்முனை பற்றுபிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதார பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.......
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பில் மட்டக்களப்பு மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மண்முணை பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முணைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7.5 மில்லியன் ரூபா நிதி மலசல கூடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கும், 3.5 மில்லியன் ரூபா நிதி மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், சமூக அமைப்புக்களுக்கான உபகரணங்கள், பாடசாலைகளுக்கான விளையாட்டு மற்றும் பேண்ட் வாத்திய கருவிகள் அத்தோடு உள்ளூர் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மண்முணை பற்று பிரதேச செயலாளர் தட்சனா கௌரி தினேஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment