காத்தான்குடியில் முன்னப்பள்ளிச் சிறார்களின் பெற்றோர்களுக்கு பற்சுகாதார முகாம்............
முன்பள்ளிகளுக்கான சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள பாலர் பாடசாலை பெற்றோர்களுக்கான பற் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் சிறுவர்களுக்கான பல் வைத்திய முகாமும் நடைபெற்றது.
புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை, அல் ஈமான் பாலர் பாடசாலை, அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலை பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் இதில் பங்பற்றினர். காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் நசிரதீன், பொதுச் சுகாதார பரிசோதகர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு, பற் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை வழங்கினர்
வைத்திய அதிகாரி மாலினி சிறீபரதன் சிறுவர்களின் பற்களை பரிசோதனை செய்தார். முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் றினோசா லாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான இர்பான் மற்றும் லத்தீபா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment