தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய மறைக்கல்வி பாடசாலை திறந்து வைப்பு..................

 தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய மறைக்கல்வி பாடசாலை திறந்து வைப்பு..................

மட்டக்களப்பு,   தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய 400 வது நிறைவு விழாவை முன்னிட்டு மறைக்கல்வி பாடசாலையை புதுப்பொழிவுடன் புணர் நிர்மாணம் செய்து ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தாண்டவன்வெளி பங்கு தந்தை ரி.ஏ.யூலியன் அடிகளாரின் தலைமையில் இன்று (30) திகதி இடம்  பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழைமையான ஆலயங்களில் ஒன்றான தாண்டவன்வெளி தூய காணிக்கை மாதா ஆலயத்தில் மறைக்கல்வி பாடசாலை கட்டடத்தினை  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் திறத்து வைத்தார்.

மறைக்கல்வி பாடசாலையில் யேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் அழகிய சுவர் ஓவியங்களை இப்பாடசாலை மாணவ மாணவிகளினால் அதிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.  

இந் நிகழ்வில் சிரேஸ்ட மறை கல்வி  ஆசிரியர்களுக்கு அதிதிகளினால் கெளரவம் வழங்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மறைக்கல்வியானது மாணவர்களிடையே ஒழுக்க விழுமியத்தை  மேம்படுத்தி சிறந்த பிரஜையாக மாற்றுவதற்கு பாரிய சேவை செயற்றி வருகின்றது. இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட் பணி ஏ.ஏ  நவரத்தினம் அடிகளார், அருட்பணி பிறைனர் செலர் அடிகளார், அருட் பணி லோரன்ஸ் அடிகளார்,  அருட் சகோதரிகள்,  பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






Comments