மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் சாதனை மாணவிகளுக்குப் பாராட்டு.......
வெளியாகியுள்ள 2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
மகாஜன கல்லூரியில் தோற்றிய மாணவிகளில் உயிர்முறைகள் தொழிநுட்ப பிரிவில் ஒரு மாணவியும், பொறியியல் தொழிநுட்ப பிரிவில் 4 மாணவிகளும், வர்த்தக பிரிவில் 7 மாணவிகளும், கலை பிரிவில் 4 மாணவிகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவிகளும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களும் மாணவிகளின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் ஓய்வு நிலை முறை சாரா கல்வி உதவி கல்வி பணிப்பாளர் தயானந்தன், கல்லூரி பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பழைய கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
Comments
Post a Comment