மட்டு மைந்தன் தங்கராஜா இன்றுடன் பதவி நிலை ஓய்வு.............

 மட்டு மைந்தன் தங்கராஜா இன்றுடன் பதவி நிலை ஓய்வு.............

இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக பதவி வகித்து தன் திறமையான சேவையின் மூலம் மட்டக்களப்பு மண்ணிற்கு மற்றுமொரு பெருமையை தேடிக் கொடுத்த சண்முகம் தங்கராஜா அவர்கள் (04) இன்றுடன் தன் பதவிக்கால ஓய்வு பெற்றுச் செல்கின்றார். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

1991ம் ஆண்டில் மதுவரித்திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக தம் முதல் பயணத்தை தொடங்கிய இவர் பல முயற்சிகள், பல தடை தாண்டல் படிப்புக்கள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகள் மூலம் பல பதவி உயர்வுகளை பெற்று, இறுதியாக கிழக்கு மாகாணத்தின் உதவி மதுவரி ஆணையாளராக தம் சேவையை வழங்கியும்,  இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று மட்டு மண்ணிற்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளார் சண் தங்கராஜா. (04) இன்றுடன் தன் கடமைகளை முடுடித்து ஓய்வு நிலைக்கு செல்கின்றார்.

பெரிய கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட இவர் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும், மட்டக்களப்பு கோட்டைமுனை மகா வித்தியாலத்தின் (இந்துக்கல்லூரி) பழைய மாணவராவார். இவர் தற்போது மட்டக்களப்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்துவருகின்றார்.


கலையில் ஆர்வமுள்ள இவர் பாடல்கள் பாடுவது, கவிதை புனைவது போன்ற பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்வதில் சிறந்தவராவார், இவர் ரோட்டறி கழகத்தின் அங்கத்தவராகவும், தலைவராகவும் பதவி வகித்ததோடு மட்டக்களப்பு தழிழ் சங்கத்தின் அங்கத்தவராகவும், கோட்டைமுனை விளையட்டு கிராமத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும்  இணைந்து மக்களுக்கான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். மற்றும் மக்களின் தேவை அறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்யும் சிறந்த சமூக சேவையாளர் ஆவார்.

தன் ஓய்வு காலத்தில் மக்களுக்கான சேவை செய்வதுடன், தன் குடும்பத்துடன் தன் வாழ் நாட்களை கொண்ட செல்ல நாமும் வாழ்த்துகின்றோம்.


Comments