மட்டக்களப்பு மாவட்ட மகளிர் கால்பந்தாட்ட அணி கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் சம்பியனாகியது .......................

 மட்டக்களப்பு மாவட்ட மகளிர் கால்பந்தாட்ட  அணி கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில்  சம்பியனாகியது .......................

(கடோ கபு) 48 வது தேசிய விளையாட்டு நிகழ்வினை முன்னிட்டு நடத்தப்படும் கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வில் மகளிருக்கான  காற்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் காற்பந்தாட்ட அணியினர் சம்பியனாக தெரிவாகினர்.

 மட்டக்களப்பு  வெபர் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருகோணமலை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6:0 என்ற கோள்கள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் காற்பந்தாட்ட அணி சம்பியனாகியது. இத் தொடரில்  மட்டக்களப்பு மகளிர் காற்பந்தாட்ட அணி சார்பாக பன்சேனை மற்றும் கட்டுமுறிவு கிராமங்களை சேர்ந்த காற்பந்தாட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய அணியினரே பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது . இத் தொடரில் மூன்றாவது இடத்தினை அம்பாறை மாவட்ட அணியினர் பெற்றுக்கொண்டனர்.

தேசிய மட்ட போட்டியிலும் இவ் அணியினர் சாதிக்க எமது சார்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


Comments