புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப பணிகள் தொடக்கம் .......................

புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப பணிகள் தொடக்கம் .......................
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக உலக வங்கி நிதியுதவியுடனான ஒருங்கிணைந்த இணைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ள புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான பிரதான வீதியின் ஆரம்ப நிகழ்வானது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் குறித்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யக்கூடிய மிக முக்கிய வீதிகளை புனரமைப்பதற்கான விலைமனு கோரல் உள்ளிட்ட அனைத்து முன்னாயத்த ஏற்பாடுகளும் நிறைவுற்றுள்ள குறித்த வீதிகளை செப்பனிடுவதற்கான ஆரம்ப நிகழ்வாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 கிலோமீட்டர் வீதிகள் செப்பனிடப்படவுள்ள நிலையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசத்தில் புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான வீதி, புலிபாய்ந்தகல் சந்தி தொடக்கம் 5ம் கட்டை சந்தி வரையான வீதி, செட்டியார் குடியிருப்பு வீதி, ஆச்சிரம வீதி, கடற்கரை வீதி, பறங்கியமடு மற்றும் கோரகல்லிமடு வீதி, வாகனேரி வீதி உட்பட 31KM வீதிகள் செப்பனிடப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சிவகுமார், பிரதம பொறியியலாளர் எந்திரி பரதன், கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் நவநீதன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆ.தேவராசா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜிவரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உத்தியோகத் தன் அருண் திருநாவுக்கரசு உட்பட திணைக்களங்களின் அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

Comments