காரைதீவில் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவன் நீரில் மூழ்கி பலி ...............
அம்பாறை, காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் லகுகலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது சுழியில் சிக்கி உயிரிழந்தார்.
இவர் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் பயின்று சகல துறைகளிலும் பிரகாசித்தவர். அண்மையில் வெளியான வெளிவந்த G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீராடச் சென்றிருந்த நிலையில் நீரினுள் பாயும் போது பாறையில் மோதி நீரினுள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளமை அப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இவரின் திடீர் மரணம் காரணமாக காரைதீவு பிரதேசம், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி சமூகம் பாரிய சோகத்தில் மூழ்கியுள்ளது.
அண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தார்.
Comments
Post a Comment