சின்ன ஊறனி மெதடிஸ்ததிருச்சபையினால்இரத்ததான முகாம்.............

சின்ன ஊறனி மெதடிஸ்ததிருச்சபையினால்இரத்ததான முகாம்.............

மட்டக்களப்பு சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையினால் 'உத்திரம் கொடுப்பீர் உயிர் காப்பீர்' மாபெரும் இரத்ததான முகாம் (02) முன்னெடுக்கப்பட்டது.

சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபையின் 37வது ஆண்டு நிறைவு பூர்த்தியினை முன்னிட்டு, திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாம் நடார்த்தப்பட்டது.

அருட் பணி ஜெகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவு வைத்தியர் ரஜெல் டீ சில்வா, பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைஸால் உட்பட வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்கள், குருதி கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .



Comments