மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் புதுவைப் பல்கலைக்கழக அறிஞர்கள் கலந்து சிறப்பித்த உரையாடல் நிகழ்வு ...........

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் புதுவைப் பல்கலைக்கழக அறிஞர்கள் கலந்து சிறப்பித்த உரையாடல் நிகழ்வு ...........

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் (12) அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் இந்தியாவின் புதுவைப் பல்கலைக்கழக அறிஞர்கள் கலந்து சிறப்பித்த உரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.

பி.ப 4.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இறைவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் பிரியா கருணாகரன் அவர்களால் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களால் வரவேற்புரையும், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து நிகழ்வுக்கான அறிமுகவுரை மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் முனைவர் முருகு தயாநிதி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தமிழரின் நாட்டார் வழிபாட்டு மரபு என்ற தலைப்பில் புதுவைப்பல்கலைக்கழக சமுதாயகல்லூரியின் பேராசிரியர் முனைவர் அரங்க மு.முருகையன் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து முனைவர் கலைவாணி அவர்களால் விபுலானந்த அடிகளாரின் இசைப்பேராற்றல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுவைப்பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முனைவர் அ.இலட்சுமிதத்தை அவர்களால் விபுலானந்த அடிகள் சொல்லறம் துறந்திலார் என்ற தலைப்பிலான கருத்துரை முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையில் உயர்கல்வி கற்கும் பல மாணவ மாணவியினரும், பாடசாலையின் அதிபர்கள், ஆசியர்களும் கலந்து சிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் வே.அமிர்தலிங்கம் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்வினை சங்க துணைச்செயலாளர் இரா.பிரதீஸ்காந்த் அவர்கள் தொகுத்து வழங்கினார்.



Comments