கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் எண்ணைய்க் காப்பு..................
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (19) எண்ணைய்க் காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு நகர் கல்லடி உட்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் காலை தொடக்கம் அபிஷேகம், கபர சௌபாக்கியங்களை அருளும் முருகப் பெருமானுக்கு இரண்டாம் கால வேள்வி, திருமஞ்சன ஆகுதி, 108 திருவியாகுதி, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம் வேண்டுதல், பேரொளி வழிபாடு, கலசம் நிறுவுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது.
இதேவேளை இன்று (19) காலை 10.30 தொடக்கம் 11.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் வள்ளி, தெய்வானை சகிதம் முருகப் பெருமானுக்கும் பரிபால தெய்வங்களுக்கும் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மற்றும் இலங்கை மடாலயங்களின் பீடாதிபதிகளால் கும்பாபிஷேகப் பெருவிழா நிகழ்த்தப்படவுள்ளது.
Comments
Post a Comment