மீண்டும் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதைத் திறப்பு திகதியில் மாற்றம்........

மீண்டும் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதைத் திறப்பு திகதியில் மாற்றம்........

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

அதாவது இப் பாதை திறக்கப்படும் திகதி யூலை 2 ஆம் திகதி எனக் கூறப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கதிர்காமத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் இத் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது யூலை 2 ஆம் திகதி திறக்கப்பட்டு 14 ஆம் திகதி மூடப்படும் என்று மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்னாயக்க அறிவித்திருக்கிறார்

 

Comments